Aalayamani – Satti Sutthadhada Song Lyrics in Tamil

Aalayamani – Satti Sutthadhada Song Lyrics in Tamil

சட்டி சுட்டதடா கை விட்டதடா
சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னே நல்லது கெட்டது தெரிந்ததடா
(சட்டி …)

பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா
ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா
அமைதி தெய்வம் முழு மனதில் கோயில் கொண்டதடா
(சட்டி …)

ஆராவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா
தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா
தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா
மனம் சாந்தி சாந்தி சாந்தியென்று ஓய்வு கொண்டதடா
(சட்டி …)

எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா – நான்
இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா
(சட்டி …)

 

தமிழ் திரைப்படங்களின் அனைத்து பாடல்களும் தமிழ் மொழியிலேயே பெரும்பாலும் கிடைப்பதில்லை அவற்றினை தமிழில் வழங்குவதற்காக அமைக்கப்பட்டதுதான் இந்த இணையதளம். இங்கு எவ்வித பாடல்களும் விற்பனை செய்யப்படவில்லை, மக்கள் விரும்பும் வகையில் பாடல்கள் தமிழ் மொழியில் அமைக்கப்பட்ட பதிவுகளாகக் கொடுக்கப்படுகின்றன. இங்கு நாங்கள் தமிழ் மொழித் திரைப்படங்களின் பாடல்களை கதாநாயகன், கதாநாயகி, இசையமைப்பாளர், பாடலாசிரியர்கள், பாடகர்கள் மற்றும் ஆண்டு என பல வகைகளாகப் பிரித்துள்ளோம். எனவே நீங்கள் எளிதில் உங்களுக்குப் பிடித்த வகையில் பாடல்களின் பாடல் வரிகளைத் தமிழில் பெறலாம்.

STAY IN TOUCH IN FACEBOOK, WEBSITE, TWITTER, YOUTUBE, GOOGLE + AND SUBSCRIBE POSTS, NEWSLETTER

Lyrics In Tamil site is fully designed for providing Tamil songs in Tamil fonts. Here we don’t send any songs but preparing them in Tamil font. Here we set Tamil songs in the aspects of Hero, Heroine, Movie Name, Music Director, Lyricist, Singers, Album and Years too. So you can collect song as per your need. The site is progressing day by day, so stay in touch for more awesome lyrics in Tamil.

Add Comment