Viyabari – Aasai Patta Song Lyrics in Tamil

Viyabari – Aasai Patta Song Lyrics in Tamil

REQUESTED BY LYRICS FAN:  SOMUSAI

 

ஆச பட்ட

எல்லாத்தையும் காசிருந்தா

வாங்கலாம் அம்மாவ வாங்க

முடியுமா நீயும் அம்மாவ

வாங்க முடியுமா

 

ஆச பட்ட

எல்லாத்தையும் காசிருந்தா

வாங்கலாம் அம்மாவ வாங்க

முடியுமா நீயும் அம்மாவ

வாங்க முடியுமா

 

ஆயிரம் உறவு

உன்ன தேடி வந்தே

நின்னாலும் தாய் போலே

தாங்க முடியுமா

 

ஆயிரம் உறவு

உன்ன தேடி வந்தே

நின்னாலும் தாய் போலே

தாங்க முடியுமா

 

உன்னையும்

என்னையும் படைச்சது

இங்கே யாருடா தெய்வம்

ஒவ்வொரு வீட்டிலும்

இருக்குதுன்னா தாயடா

 

உன்னையும்

என்னையும் படைச்சது

இங்கே யாருடா தெய்வம்

ஒவ்வொரு வீட்டிலும்

இருக்குதுன்னா தாயடா

 

ஆச பட்ட

எல்லாத்தையும் காசிருந்தா

வாங்கலாம் அம்மாவ வாங்க

முடியுமா நீயும்

 

 

பட்டினியா கெடந்தாலும்

பிள்ளைக்கு பால் கொடுப்பா

பால் குடிக்கும் பிள்ளை முகம்

பாா்த்தே பசி மறப்பா

 

இள வட்டம் ஆன

பின்னும் எண்ணெய் தேச்சு

குளிக்க வைப்பா உச்சி முதல்

பாதம் வர உச்சி கொட்டி

மகிழ்ந்திடுவா

 

நெஞ்சிலே நடக்க

வைப்பா நிலாவ பிடிக்க

வைப்பா பிஞ்சு விரல் நகம்

கடிப்பா பிள்ளை எச்சு சோறு

தின்பா

 

பல்லு முளைக்க

நெல்லு முனையால்

மெல்ல மெல்லதான்

கீரி விடுவா

 

உன்னையும்

என்னையும் படைச்சது

இங்கே யாருடா தெய்வம்

ஒவ்வொரு வீட்டிலும்

இருக்குதுன்னா தாயடா

 

ஆச பட்ட

எல்லாத்தையும் காசிருந்தா

வாங்கலாம் அம்மாவ வாங்க

முடியுமா நீயும் அம்மாவ வாங்க

முடியுமா

 

மண்ணில் ஒரு

செடி மொளைச்சா

மண்ணுக்கு அது

ப்ரசவம்தான் உன்னை

பெற துடி துடிச்சா

அன்னைக்கு அது

பூகம்பம்தான்

 

சூரியன சுத்திகிட்டு

தன்னை சுத்தும் பூமி அம்மா

பெத்தெடுத்த பிள்ளைய சுத்தி

பித்து கொள்ளும் தாய்மை அம்மா

 

கர்ப்பத்தில் நெளிந்த

உன்னை நுட்பமாய் தொட்டு

ரசிப்பா பேதை போல் அவள்

இருப்பாள் மேதையாய் உனை

வளர்ப்பா

 

என்ன வேண்டும்

இனி உனக்கு அன்னை

மடியில் சொர்கம் இருக்கு

என்ன வேண்டும்

இனி உனக்கு அன்னை

மடியில் சொர்கம் இருக்கு

 

 

Lyrics In Tamil site is fully designed for providing Tamil songs in Tamil fonts. Here we don’t send any songs but preparing them in Tamil font. Here we set Tamil songs in the aspects of Hero, Heroine, Movie Name, Music Director, Lyricist, Singers, Album and Years too. So you can collect song as per your need. The site is progressing day by day, so stay in touch for more awesome lyrics in Tamil.

STAY IN TOUCH IN

ANDROID APP (https://play.google.com/store/apps/details?id=com.lyricsin.tamil)
FACEBOOK (https://www.facebook.com/songlyricsintamil/)
WEBSITE (http://www.lyricsintamil.com/)
YOUTUBE (https://www.youtube.com/channel/UCSQU7zE6O0AnB_VYja_i_pg)
AND
SUBSCRIBE POSTS (http://feeds.feedburner.com/lyricsintamil)
NEWSLETTER
(http://feeds.feedburner.com/lyricsintamil)

எங்களால் முடிந்தவரை அனைத்து படங்களின் பாடல்களையும் தமிழ் மொழியில் கொடுக்க முயல்கிறோம். இருப்பினும் அதிகப்படியான எண்ணிக்கையிலான பாடல்கள் இருப்பதால் சில தருணங்களில் எழுத்துப்பிழைகள் ஏற்படலாம். தாங்கள் ரசிக்கும் பாடலில் ஏதேனும் பிழைகள் இருப்பின் தயவுசெய்து அவற்றினை கமெண்ட் பிரிவில் பதிவிடவும், தங்களின் கருத்துக்கள் முடிந்தவரை விரைவாக சரிசெய்யப்படும். ஆதரவிற்கு மிக்க நன்றி!!!

தமிழ் திரைப்படங்களின் அனைத்து பாடல்களும் தமிழ் மொழியிலேயே பெரும்பாலும் கிடைப்பதில்லை அவற்றினை தமிழில் வழங்குவதற்காக அமைக்கப்பட்டதுதான் இந்த இணையதளம். இங்கு எவ்வித பாடல்களும் விற்பனை செய்யப்படவில்லை, மக்கள் விரும்பும் வகையில் பாடல்கள் தமிழ் மொழியில் அமைக்கப்பட்ட பதிவுகளாகக் கொடுக்கப்படுகின்றன. இங்கு நாங்கள் தமிழ் மொழித் திரைப்படங்களின் பாடல்களை கதாநாயகன், கதாநாயகி, இசையமைப்பாளர், பாடலாசிரியர்கள், பாடகர்கள் மற்றும் ஆண்டு என பல வகைகளாகப் பிரித்துள்ளோம். எனவே நீங்கள் எளிதில் உங்களுக்குப் பிடித்த வகையில் பாடல்களின் பாடல் வரிகளைத் தமிழில் பெறலாம்.

Add Comment